ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்
சென்னை, கோவை, மதுரையில் விரைவில், மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் என ஆளூநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
சென்னை, கோவை, மதுரையில் விரைவில், மின்சார பேருந்துகள் அறிமுகம்
செய்யப்படும் என ஆளூநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். இந்தாண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில், பேரவையில் உரையாற்றிய ஆளுநர், கிழக்கு கடற்கரை சாலையை 4 வழி தேசிய நெடுஞ் சாலையாக மாற்றும் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடியது. முன்னதாக சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு சபாநாயகர் தனபால், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் பேரவை கூடியதும், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் எழுந்து, குறுக்கிட்டு பேச முயன்றார். அதற்கு ஆளுநர், ஒரு நிமிடம் பொருத்திருங்கள். " அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்- எளிமையான வாழ்க்கை வாழுங்கள் - இது ஊழலை அகற்றி விடும். இதுவே எனது செய்தி " என ஆளுநர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமது உரையை ஆங்கிலத்தில் வாசித்தார். இதில், பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
Next Story