பாலம் அமைக்க தோண்டப்பட்ட 15 அடி பள்ளத்தில் வாகனத்தோடு விழுந்தவர் பலி
திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்படும் பாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளம் குறித்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் புதிதாக பாலம் அமைப்பதற்கு சுமார் 15 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, கடந்த 4 மாதமாக எந்தப் பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் treasury காலனி பகுதியை சேர்ந்த வாகன மெக்கானிக் சங்கர், அந்த வழியில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பள்ளத்தில் விழுந்து இறந்துள்ளார். காலையில் பொதுமக்கள் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்தில் இருந்து சங்கரின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மக்கள் பயனிக்கும் சாலையில் பள்ளம் தோண்டி எந்தவித அறிவிப்போ எச்சரிக்கை பலகையோ வைக்காததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
Next Story