கொடிவேரி தடுப்பணை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். காலை முதல் அருவிக்கு வந்தவர்கள் தங்கள் செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர். ஏராளமான பயணிகள் வந்ததால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதோடு ஏராளமான காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அருவியில் குளித்தும், பூங்காக்களில் குழந்தைகளுடன் விளையாடியும், பரிசல் சவாரி செய்தும் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.
Next Story