அழிந்துவரும் பறவை இனங்கள் : அழகை இழந்துவரும் கொடைக்கானல்
பறவை இனங்களின் அழிவு காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதி இயற்கை அழகை இழந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் 196 வகையான அரிய வகை பறவை இனங்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றன. பருவநிலை மாற்றம், விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை சிறிது சிறிதாக குறைந்து வந்த நிலையில், தற்போது சோலை மரங்களும் வெட்டப்படுவதால் பறவை இனங்கள் வேகமாக அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அங்குள்ள தோட்டபகுதிகள் அழிக்கப்பட்டு வருவதாலும் அடுக்குமாடி குடியிருப்புகள் , பயணியர் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருவதாக குற்றம்சாட்டும் சுற்றுலா பயணிகள், பறவை இனங்களை காப்பதற்கு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story