"கோயில் சொத்துகள், பொருட்களை கணக்கெடுக்க கமிட்டி" - தமிழக அரசுக்கு அமைச்சர் வேண்டுகோள்

மதுரையில் ஹிந்து ஆலய பாதுகாப்பு குழுவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாநில மாநாடு நடைபெற்றது.
x
மதுரையில் ஹிந்து ஆலய பாதுகாப்பு குழுவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாநில மாநாடு நடைபெற்றது. இதில் ஹிந்து ஆலய பாதுகாப்பு குழு மாநிலத் தலைவர் தெய்வபிரகாசம், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில துணை தலைவர் மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், விழா மலரை வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துகள் மற்றும் சிலைகளை மீட்க அந்தந்த பகுதி இந்து பெரியவர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்