மணல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு - குவாரி அமைய உள்ள இடத்தில் வல்லூநர் குழு ஆய்வு...
மணல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, குவாரி அமைய உள்ள இடத்தில் சிறப்பு குழுவினர் ஆய்வு.
காவிரி ஆற்றில் மணல் திட்டுகள் உள்ள இடத்தில் மணலை எடுக்க, அரசு மணல் குவாரி அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியது. மணல் குவாரியை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 21 ஆம் தேதி பல்வேறு கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விவசாயிகள் சார்பில் பொன்னுராமன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து உண்மை நிலை அறிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கணபதி, முதுநிலை நில நீர் வல்லுநர் புகழேந்தி, ஐ.ஐ.டி. பேராசிரியர் மோகன், அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ். ஆகியோரை உள்ளடக்கிய சிறப்பு வல்லூநர் குழுவை அமைத்தது. இந்த குழுவினர் குவாரி அமைய உள்ள இடத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்தது.
Next Story