விபூதி அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவர்
தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள காலபைரவர் ஆலயத்தில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள காலபைரவர் ஆலயத்தில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயிலில், விபூதி அலங்காரத்தில் காலபைரவர் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனா். வேண்டுதலை நிறைவேற வேண்டி, எலுமிச்சை, பூசணி, தேங்காயில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
Next Story