விதிமீறல் கட்டிடங்களுக்கு மின்சாரம், குடிநீர் கிடையாது - உயர் நீதிமன்றம்
விதிமீறல் கட்டிடங்களின் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை உடனடியாக துண்டிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மண்ணடியில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கட்டிட உரிமையாளர் மெஹ்ராஜ் பேகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்திய நாதன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களின் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
விதிகளை மீறுபவர்களை நீதிமன்றம் பாதுகாக்காது என கூறிய நீதிபதிகள், மாநகராட்சி அதிகாரிகளின் உதவி இல்லாமல் இது போன்ற விதிமீறல்களில் யாரும் ஈடுபட முடியாது என குறிப்பிட்டனர். நேர்மையற்ற அதிகாரிகள் மீது பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து விபரங்களை அவ்வப்போது இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணை ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Next Story