தீவிரமடையும் சாமந்தி பூ சாகுபடி...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாமந்தி பூ பயிர் செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.
தீவிரமடையும் சாமந்தி பூ சாகுபடி...
x
திருவண்ணாமலை மாவட்டம்  செங்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாமந்தி பூ பயிர் செய்வதில் விவசாயிகள் தீவிரம்  காட்டியுள்ளனர். தற்போது விளைச்சல் இருந்தும் விலை குறைவாக உள்ளதால்,   பொங்கல் பண்டிகையில்  நல்லவிலை கிடைக்கும் என்று நம்புவதாகவும் கூறினர்.   இங்குள்ள விவசாயிகள்  நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த அளவு நீரைக் கொண்டு குறுகிய கால பயிரான சாமந்திபூ பயிரிட்டுள்ளனர். 1 ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவு செய்தால் 60 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் என்றும், ஆனால் தற்போது விலை மிகக் குறைவாக உள்ளதால், பொங்கல் பண்டிகை நெருங்க நல்ல விலை கிடைக்கும் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் அதிகளவில் பூ உற்பத்தி செய்யப்படுவதால் இங்கு வாசனை திரவிய ஆலை அமைக்கவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்