"பொங்கல் பண்டிகைக்காக இலவசப் பொருட்கள் வழங்க ஒப்புதல் இல்லை" - ஆளுநர் கிரண்பேடி மீது முதல்வர் நாராயணசாமி புகார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி மக்களுக்கு அரிசி, வெள்ளம் உள்ளிட்ட இலவச பொருட்கள் வழங்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கவில்லை என முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பொங்கல் பண்டிகைக்காக இலவசப் பொருட்கள் வழங்க ஒப்புதல் இல்லை - ஆளுநர் கிரண்பேடி மீது முதல்வர் நாராயணசாமி புகார்
x
காங்கிரஸ் கட்சியின் 134 வது தொடக்க தினத்தை முன்னிட்டு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மாநிலத்தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் மாநிலத்தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதனைதொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.முன்னதாக விழா மேடையில் பேசிய  முதலமைச்சர் நாராயணசாமி,  பொங்கல் பண்டிகைக்கு அரிசி, வெள்ளம் உள்ளிட்ட  இலவச பொருட்கள் கொடுக்க நிதியிருந்தும், அதற்காக அனுமதி கேட்டு அனுப்பிய கோப்பை ஆளுநர் கிரண்பேடி திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்