நூதன முறையில் இருசக்கர வாகனம் திருடி விற்பனை -கேளம்பாக்கம் அருகே 4 பேர் கைது
விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி போலி ஆவணங்கள் மூலம் விற்று வந்த கும்பலை சேர்ந்த 3 பேரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி போலி ஆவணங்கள் மூலம் விற்று வந்த கும்பலை சேர்ந்த 3 பேரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கோட்டுர்புரத்தில் தொடர்ந்து விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருடு போய் வந்த நிலையில், உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. சி.சி.டி.வி. உதவியுடன் கேளம்பாக்கம் பகுதியில் 2 நாட்கள் தங்கி விசாரணை நடத்தியுள்ளனர். இதில் புதுப்பாக்கம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 6 இளைஞர்கள் தங்கி இருந்ததும், புதிது புதிதாக இருசக்கர வாகனங்களை அவர்கள் எடுத்து வந்ததும் தெரியவந்ததை அடுத்து குறிப்பிட்ட அந்த வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சந்தீர், ரமேஷ், விஜயன் மற்றும் பிரபாகர் ஆகியோரை கைது செய்த தனிப்படையினர் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர். காலாவதியான இருசக்கர வாகனங்களின் ஆர்.சி. புக்கில் உள்ள எண்களை, திருடிய வாகனங்களில் பதித்து, புதிய வாகனம் போல் இணையதளத்திலும், வெளியாட்களிடமும் விற்று வந்ததை போலீசாரிடம் அந்த கும்பல் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கைதானவர்களிடம் இருந்து 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story