வைகை அணையின் நீர்மட்டம் சரிவு...

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் சரிவு...
x
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போது விவசாய பாசனத்திற்காக வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கால்வாய் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர் அடுத்து வரும் 5 நாட்களுக்கு திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம், தற்போது  56.82 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 682 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்