ரத்த மாதிரி பெற வழிமுறை என்ன?

ரத்த மாதிரிகளை பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
x
அதன்படி, ரத்தம் கொடுப்பதற்கு முன்னர், ரத்தப் பிரிவு, ரத்த அழுத்தத்தின் அளவு, உடலின் வெப்பநிலை மற்றும் ஹீமோகுளோபின் போன்றவை சோதனை செய்ய வேண்டும். குறைந்தது ஆறு மாத இடைவெளிக்கு பிறகு கொடையாளி ரத்ததானம் செய்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும். ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் தட்டணுக்கள் எண்ணிக்கையை பார்க்க வேண்டும். தொற்று நோய் அல்லது தொற்றா நோய் உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக ஹெச்.ஐ.வி, காச நோய், கல்லீரல் தொடர்பான நோய்கள் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய  வேண்டும். இதில் ஏதாவது தென்பட்டால் அந்த ரத்த மாதிரியை நிராகரிக்க வேண்டும். இந்த பரிசோதனையில் தேர்வான ரத்த மாதிரி குளிர்பதன கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு, தேவையான நேரத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் என சுகாதாரத்துறை வழிமுறை வகுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்