குளம் தூர்வார எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
திருவிடைமருதூர் அருகே குளம் தூர் வார எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர்கள், பொக்லைன்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
* தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலுக்கு சொந்தமான தீர்த்த குளங்கள் ஆதீனகட்டளை சுவாமிநாததம்பிரான் சுவாமிகள் மேற்பார்வையில் கடந்த சில மாதங்களாக தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவிடைமருதூர் அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் உள்ள குளம் தூர்வாரும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
* அப்போது திருவிடைமருதூரை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அங்கு சென்று குளத்தில் முறைகேடாக மண் எடுப்பதாக கூறி டிராக்டர் உள்ளிட்டவற்றை சுற்றி வளைத்தனர். இதைத்தொடர்ந்து அங்கு சென்ற அதிகாரிகளுக்கும்,முற்றுகையிட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோயில் நிர்வாகம் முறைப்படி தூர்வாரும் பணியை மேற்கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனிடையே, குளத்தை தொடர்ந்து தூர்வார கோரி கிராமத்தினர் தாலுகா அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
Next Story