ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு : சிபிஐ விசாரணை தீவிரம்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
x
ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ எஸ்.பி. சரவணன் தலைமையிலான குழுவினர் துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரம் தொடர்பாக 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த சுமார் 40 பேரிடம் வாக்குமூலத்தை அவர்கள் பெற்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 15 துப்பாக்கிகள் யாருடைய உத்தரவில் வழங்கப்பட்டது, கையெழுத்திட்டு வாங்கிய காவல் துறை அதிகாரிகள் யார் என்பது  குறித்தும், யாருடைய அனுமதியின் பேரில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது என்பது தொடர்பான ஆவணங்களை தமிழக சிபிசிஐடி அதிகாரிகளிடம் இருந்து சிபிஐ பெற்றுள்ளது. இதுதொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வரும் நிலையில், விசாரணையின்போது அதனை அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாகவும் சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்