35 நாட்களுக்கு பிறகு அமமுக நிர்வாகி உடல் தோண்டி எடுப்பு
கோவையில் கொல்லப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட அ.ம.மு.க. பிரமுகரின் உடல், 35 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி ஜெயவேணு, வழக்கு ஒன்றுக்கு சாட்சி சொல்ல கோவை வந்த போது, கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக புனேவில் தலைமறைவாக இருந்த ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ஜெயவேணுவின் உடல் கிணற்றில் வீசப்பட்டதாக ராஜேஷ் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, கடந்த 21 ஆம் தேதி முதல் பாழடைந்த கிணற்றில் ஜெயவேணுவின் உடலை எடுக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். 35 நாட்களுக்கு பிறகு, ஜெயவேணுவின் எலும்பு கூடு, சிக்கியது. கோவை வடக்கு வட்டாட்சியர் சிவக்குமார் முன்னிலையில், அரசு மருத்துவர் ஜெய்சிங் பரிசோதனை செய்தார். ஜெயவேணுவின் எலும்பு கூட்டை, சென்னை கொண்டு வர கோவை காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
Next Story