தாயை கொன்ற கொடூர மகள்...
திருவள்ளூர் அருகே காதலுடன் செல்ல தடையாக இருந்த தாயை மகளே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காக்களூர் ஆஞ்சநேயபுரம் 8-வது தெருவில் வசித்து வருபவர் திருமுருகன். தனியார் கல்லூரியில் பி.காம் பயின்று வரும் இவருடைய மகள் தேவிப்பிரியா மைசூரை சேர்ந்த சுரேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அவரது தாய் எதிர்ப்பு தெரிவித்து மகளை கல்லூரிக்கு அனுப்பாமல் கண்டித்துள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியேற திட்டமிட்ட தேவிப்பிரியா, தொலைபேசியில் சுரேசுக்கு தகவல் அளித்துள்ளார். அவரை அழைத்து செல்ல சுரேஷ் நண்பர்கள் இருவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனை கண்ட தாயார் பானுமதி, தேவிபிரியாவை வீட்டில் இருந்து செல்லவிடாமல் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்,கத்தியால் தாயை சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த பானுமதி சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அங்கிருந்த தப்பிச்செல்ல முயன்ற 3 பேரையும் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"காதலனுடன் சேர்ந்து வாழ தாயை கொன்றேன்" - கைதான இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்
காதலுடன் சேர்ந்து வாழவே, நண்பர்கள் உதவியுடன் தாயை கத்தியால் குத்தி கொன்றதாக, கைதான இளம்பெண் ஒப்புக்கொண்டுள்ளார். காதலன் சுரேசுடன் சேர்ந்து வாழ்வதற்காக, வீட்டைவிட்டு வெளியேற முயன்ற போது தாய் பானுமதி தடுத்தாகவும், இதனால் ஆத்திரத்தில் தாயை கத்தியால் குத்தி கொன்றதாகவும் காவல்துறையிடம் அந்த பெண் தெரிவித்தார். இதனிடையே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தடவை கிராமத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தேவிபிரியாவின் காதலன் சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story