கேபிள் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு - தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் போராட்டம்

கேபிள் டிவி கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேபிள் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு - தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் போராட்டம்
x
நெல்லை ரயில்நிலையம் அருகே நடந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கேபிள் கட்டணம் உயர்த்தும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

நாகையில் நடந்த போராட்டத்தில், டிராய் கொண்டுவந்துள்ள புதிய திட்டத்தை கைவிட வேண்டும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். 

காஞ்சிபுரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்