ஸ்ட்ராபெர்ரி பழத்தை சேதப்படுத்தும் குரங்குகள் கூட்டம்

ஊட்டி அருகே ஸ்ட்ராபெர்ரி பழத்தை சேதப்படுத்தும் குரங்குகளை, கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ட்ராபெர்ரி பழத்தை சேதப்படுத்தும் குரங்குகள் கூட்டம்
x
ஊட்டி அருகே ஸ்ட்ராபெர்ரி பழத்தை சேதப்படுத்தும் குரங்குகளை, கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாம்பட்டி அருகே அவிலாஞ்சி, மைனலா போன்ற பகுதிகளில் பசுமை குடில் அமைத்து நவீன தொழில்நுட்பத்துடன் ஸ்ட்ராபெர்ரி பழம் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றனர். இந்த இடங்களில் கூட்டமாக வரும் குரங்குகள், குடில்களை சேதப்படுத்தி சாகுபடி செய்யப்பட்டிருக்கும் ஸ்ட்ராபெர்ரி பழங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பகுதிகளுக்குள் படையெடுக்கும் குரங்கு கூட்டங்களை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்