கேபிள் டிவி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு - ஆப்ரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கேபிள் டிவி கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் அச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேபிள் டிவி கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் அச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமையில், போராட்டம் நடந்தது. கேபிள் டிவி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தனர். கோரிக்கையை நிறைவேற்ற தவறும் பட்சத்தில், மக்களை ஒன்று திரட்டி ஜனவரி 30ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும் எனவும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் நிறுவனர் சகிலன் அறிவித்துள்ளார்.
Next Story