ஜனவரி முதல் மக்களை சந்திக்க உள்ளோம் - திமுக தலைவர் ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னோட்டமாக ஜனவரி 3ம் தேதி முதல் ஊராட்சிதோறும் மக்களை சந்திக்க திமுக முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னோட்டமாக ஜனவரி 3ம் தேதி முதல் ஊராட்சிதோறும் மக்களை சந்திக்க திமுக முடிவு செய்துள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. முதலில், 'கஜா' புயலால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதன்பின்னர், நடைபெற்ற கூட்டத்தில் வாக்குச்சாவடி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டியை கண்காணிப்பதற்காக அமைத்திருக்கும் குழுவின் செயல்பாடு மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான குழுவின் நேரடி கள ஆய்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக ஊராட்சிதோறும் ஜனவரி 3ம் தேதி முதல் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
Next Story