தாய் மாமன் தோள்களில் பவனி வரும் பெண் குழந்தைகள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சங்கரண்டாம் பகுதியில் திருவாதிரையை முன்னிட்டு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொன்னூஞ்சல் திருவிழா நடத்தப்பட்டது.
நூற்றாண்டுகாலமாய் தொடரும் இந்த பாரம்பரிய திருவிழாவில் கலந்துகொள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர்.
முதல் குழந்தையாய் பிறக்கும் பெண் பிள்ளைகளுக்கு பட்டாடைகள், அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு, விநாயகர் கோவிலுக்கு கொண்டுவரப்படுகின்றனர். அங்கு 16 வகை சீர்களுடன் காத்திருக்கும் தாய்மாமன்கள், சிறுமிகளை தோள்களில் சுமந்து நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாய் கொண்டு சென்று பொன் ஊஞ்சலில் அமர வைக்கின்றனர். சிறிது நேரத்திற்கு சிறுமிகளை அம்மனின் உருவமாய் நினைத்து, உறவினர்கள் ஊஞ்சலில் ஆட வைக்கின்றனர். பெண் குழந்தைகளை சாபமாக பார்க்கும் மக்களுக்கு மத்தியில், இப்படி இளவரசிகளாக பாவிக்கும் வழக்கம், போற்றத்தக்கது என்பதில் ஐயமில்லை
Next Story