மோடியின் 'எனது வாக்குச்சாவடி வலிமையான வாக்குச்சாவடி' : புதுச்சேரி தொண்டரின் கேள்வியால் பாஜக புதிய திட்டம்

காணொலி உரையாடலின்போது, பிரதமர்​​ மோடியிடம் தொண்டர்கள் கேட்கும் கேள்விகளை இரண்டு முறை பரிசோதிக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.
மோடியின் எனது வாக்குச்சாவடி வலிமையான வாக்குச்சாவடி : புதுச்சேரி தொண்டரின் கேள்வியால் பாஜக புதிய திட்டம்
x
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் உள்ள பாஜக தொண்டர்களுடன், 'எனது வாக்குச்சாவடி... வலிமையான வாக்குச்சாவடி' என்ற பெயரில்,  காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாடி வருகிறார். புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் உரையாடிய பிரதமர் மோடி, விரைவில் வட மாநிலங்களில் உள்ள கட்சி தொண்டர்களுடன் காணொலி மூலம் உரையாட இருக்கிறார். 

இதற்கிடையே, புதுச்சேரியில் உரையாடியபோது, நிர்மல் குமார் ஜெயின் என்பவர், 'நடுத்தர மக்களின் மீது கடுமையாக வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளதாகவும் வருமான வரி தொடர்பாகவும், மோடியிடம் நேரடியாக கேள்வி எழுப்பியதால் சிக்கல் ஏற்பட்டது. இதை தவிர்ப்பதற்காக, காணொலி உரையாடலில் பங்கேற்கும் தொண்டர்கள் மற்றும் அவர்களின் கேள்விகளை இரண்டு முறை பரிசோதிக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு தொகுதிகளிலும் 500  முதல் 1000 வரையிலான கேள்விகள் வருவதாகவும், அவற்றை 48 மணி நேரத்துக்கு முன்பே, 'நமோ ஆப்'பில் வீடியோவாக அனுப்புமாறும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஞாயிறன்று தமிழகத்தில் உள்ள தொண்டர்களுடன் உரையாடிய போதே இந்த நடைமுறை அமலுக்கு வந்து விட்டதாகவும், சர்ச்சையான கேள்விகளை தவிர்ப்பதற்காக, இரண்டு முறை அவற்றை பரிசோதித்து, 2 நாட்களுக்கு முன்பே அனுப்பி வைத்ததாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்