பலாப்பழமான வரிகளை மத்திய அரசுக்கு கொடுக்க முடியாது - ஜெயகுமார்
வரி வருவாய் அனைத்தையும், மத்திய அரசு என்ற கடலில் போட முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வரி வருவாய் அனைத்தையும், மத்திய அரசு என்ற கடலில் போட முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 31-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 33 பொருட்களுக்கு வரி குறைப்பு செய்திருப்பதாகவும், சிறுகுறு தொழில் வருமான வரியை ஒருகோடியில் இருந்து ஒன்றரை கோடி ரூபாயாக உயர்த்தவுள்ளதாகவும் கூறினார். பெட்ரோல், டீசல், மது மூலம் கிடைக்கும் வரி வருவாய் என்ற பலாப்பழத்தை மத்திய அரசிடம் கொடுக்க முடியாது என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.
Next Story