பொங்கல் பரிசு - தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் பரிசை அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு, தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று பொங்கல் பரிசுத் தொகுப்பை முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, முந்திரி, திராட்சை தலா 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் 210 கோடி ரூபாய் செலவாகும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story