கோயில் யானை 'ஆண்டாள்' நெற்றியில் சிலுவை அடையாளம் : வாட்ஸ்அப்பில் பரவிய படத்தால் பரபரப்பு
மேட்டுப்பாளையம் அருகே நடைபெற்று வரும் புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ள கோயில் யானையின் நெற்றியில் சிலுவை அடையாளம் காணப்படும் படத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நடைபெற்று வரும் முகாமில் பங்கேற்றுள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் யானையை குளிப்பாட்டிய பாகன், சம்பிரதாயப்படி முறைப்படி அதன் நெற்றியை அலங்காரித்தார். ஆனால், சிறிது நேரத்துக்கு பிறகு, அந்த ஆண்டாள் யானையின் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்திருப்பது போல் புகைப்படம் வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவியது. இதனால் பாகன் உள்பட முகாமில் உள்ள அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், யாரோ ஒருவர் ஆண்டாள் யானையை புகைப்படம் எடுத்து, அதன் நெற்றியில் கிராபிக் செய்தது, தெரியவந்தது. அவர்கள் யார் என்பது குறித்து புத்துணர்வு முகாம் மற்றும் நல வாழ்வு முகாம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Next Story