சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்...

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டப் பயனாளிகளை அலைக்கழிப்பதாக கூறி, சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.
x
சேலத்தில், 'தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டப் பயனாளிகளை அலைக்கழிப்பதாக கூறி, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் பெண்களிடம் பேச்சு  நடத்தி சமாதானம் செய்தனர். கடந்த ஒன்றரை வருடமாக, தங்கம் வாங்குவதற்கு அலைந்து வருவதாகவும், சமூகநலத்துறை அதிகாரிகள் தங்கம் தருவதாக கூறி, வரச்சொல்லி கையெழுத்து பெற்றுக் கொண்டு டோக்கன் மட்டுமே வழங்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்