சான்றிதழ் இல்லாமல் முதலுதவி பயிற்சியளித்து மோசடி
தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக முதலுதவி பயிற்சி அளித்து வந்தவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் செயிண்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் என்ற பெயரில் 1951ம் ஆண்டு முதல், தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் பாதுகாப்பு பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்ற சூர்ய நாராயணன், விதிகளை மீறியதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட பின்னரும், அந்த நிறுவனத்தில் பணி செய்வதாக கூறி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நிறுவனங்களை தொடர்பு கொண்டு, முதலுதவி சிகிச்சை குறித்து பயிற்சி அளித்து வந்துள்ளார். இதற்காக அவர் 350 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கட்டணம் பெற்றுள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார், தற்போது சூர்ய நாராயணணை கைது செய்து, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களை பறிமுதல் செய்தனர்.
Next Story