சசிகலா உள்பட 16 பேருக்கு நோட்டீஸ்
டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு ஆணை வழங்கியதை சட்ட விரோதமாக அறிவிக்க கோரிய வழக்கில், சசிகலா உள்ளிட்ட 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு ஆணை வழங்கியதை சட்ட விரோதமாக அறிவிக்க கோரிய வழக்கில், சசிகலா உள்ளிட்ட 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார் என்றும், அவரது பணி நீட்டிப்பை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கண்ணன், காணாமல் போனதாக கூறப்பட்ட குட்கா வழக்கு ஆவணங்கள் அனைத்தும், எந்த பொறுப்பிலும், பதவியிலும் இல்லாத சசிகலாவின் அறையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
மேலும், இது தொடர்பாக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இயக்குநரே அறிக்கை தாக்கல் செய்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே தமிழக தலைமை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில் ஆவணங்கள் காணாமல் போனதாக உள்ளதையும், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகள் முன் எடுத்து வைத்தார்.
இதையடுத்து தமிழக தலைமை செயலர், டிஜிபி, வருமான வரித்துறை தலைமை ஆணையர், சி.பி.ஐ. இயக்குநர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், டிகே.ராஜேந்திரன், சசிகலா உள்ளிட்ட 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கை ஜனவரி 2-க்கு ஒத்திவைத்த நீதிபதிகள், மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்படுவதாக தெரிவித்தனர்.
Next Story