பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை கோரி பேரணி - வேலை வாய்ப்பின்றி அவதிப்படுவதாக கூறி மனு
சிவகாசியை சுற்றியுள்ள பகுதிகளில் மூடப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பேரணியாக சென்று மனு அளித்தனர்.
சிவகாசியை சுற்றியுள்ள பகுதிகளில் மூடப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பேரணியாக சென்று மனு அளித்தனர். பட்டாசு தொழிலுக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்த நிலையில் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆலைகள் காலவரையின்றி மூடுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவித்தனர். ஆனால் இதனை சார்ந்துள்ள 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருவதால் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி தொழிலாளர்கள் பேரணியாக சென்றனர். பின்னர் சிவகாசி கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்
Next Story