பறக்கும் ரயில் திட்டத்திற்காக தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரியில் பறக்கும் ரயில் திட்டத்திற்காக தெற்கு ரயில்வே-க்கு தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேளச்சேரியில் பறக்கும் ரயில் திட்டத்திற்காக தெற்கு ரயில்வே-க்கு தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நிலம் ஒதுக்கியது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து 97 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பு காரணமாக 25 ஆண்டுகளாக முடங்கியிருந்த பறக்கும் ரயில் திட்டத்தை செயல்படுத்த உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
Next Story