தள்ளிப்போகும் தமிழக உள்ளாட்சி தேர்தல் : மத்திய அமைச்சர் தகவல்
தமிழகத்துக்கான உள்ளாட்சி வளர்ச்சி நிதியின் முதல் தவணை தொகையான, 877 கோடி ரூபாயை வழங்க வாய்ப்பு இல்லை என்று மத்திய பஞ்சாயத்து துறை இணை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத காரணத்தினால் 2018-19ஆம் நிதியாண்டிற்கான உள்ளாட்சி வளர்ச்சி நிதியின் முதல் தவணையான 877 கோடி ரூபாயை தமிழகத்துக்கு வழங்க வாய்ப்பு இல்லை என்றார். இந்த நிலைப்பாட்டை மறுபரீசிலனை செய்யவும் வாய்ப்பில்லை என்றும் மத்திய இணை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்தார். மேலும் 2017-18ஆம் நிதியாண்டுக்கான செயல்பாட்டு நிதி 195 கோடி ரூபாயை வழங்குவதற்கும் வாய்ப்பு இல்லை என அவர் கூறினார்.
Next Story