பேனர்களை அகற்றாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் : அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

விதிமீறல் பேனர்களை அகற்றமுடியாவிட்டால், ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் சேருங்கள் என அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பேனர்களை அகற்றாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் : அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
x
விதிமீறி வைக்கப்படும் பேனர் தொடர்பாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் வந்த சோனியா, ராகுலை வரவேற்கவும், ரஜினி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும் விதிமீறி வைக்கப்பட்ட பேனர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி அவர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதற்கு, பேனர்கள் விதிமீறி வைக்கப்படவில்லை என்றும், சிலர் தாமாகவே முன்வந்து அகற்றியதாகவும் அரசு பதிலளித்தது.  இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, சட்டவிரோத பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் கட்சியில் சேர்ந்துவிடுங்கள் என்று கூறினர். அதுகுறித்த விரிவான விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.

அனுமதி மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை



சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி, பேனர்கள் வைத்தால், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தியில்,  சட்ட விரோத பேனர்கள் குறித்து பொதுமக்கள், 1913 என்ற இலவச தொலைபேசி மூலம் புகார் கொடுக்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்