காக்கிநாடா - ஏனாம் இடையே கரையை கடந்தது 'பெய்ட்டி' புயல்

ஆந்திர மாநிலத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கரையை கடந்த பெய்ட்டி புயல் காரணமாக 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
x
பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா - ஏனாம் இடையே இன்று பிற்பகல் கரையை கடந்தது. அப்போது பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த புயலின் காரணமாக காக்கிநாடா, மசூலிப்பட்டினம், ஏனாம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, மின்சாரமும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் அமைக்கப்பட்ட 50 முகாம்களில் சுமார் 8 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்