ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உரிய மருத்துவச் சீட்டு இல்லாதவர்களுக்கும் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யப்படுவதால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்தது. ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்த வேண்டும் எனவும் அதற்கான விதிகளை ஜனவரி 31ஆம் தேதிக்குள் வகுத்து அரசிதழில் வெளியிட வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகள் வெளியிட்ட பிறகு, 2 மாதங்களில் விண்ணப்பித்து உரிமம் பெற ஆன்லைன் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story