வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்து, கடந்த இரு தினங்களுக்கு முன், டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பை கேட்க வேண்டும் எனவும், தங்கள் வாதத்தை கேட்காமல், எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் எனவும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story