நீர்நிலைகளை, நதிகளுடன் இணைக்க கோரிய வழக்கு - தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
நீர்நிலைகளை, நதிகளுடன் இணைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலைகளை, நதிகளுடன் இணைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகளை நதிகளுடன் இணைக்க நிபுணர் குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி மதுரை சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அதில், கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே மனுதாரரின் நோக்கமாக உள்ளது, அதற்காக நீர்நிலைகளை நதிகளோடு இணைக்க வேண்டும் என தந்திரமாக வைத்துள்ள கோரிக்கையை ஏற்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Next Story