கொள்கை முடிவு எடுத்து ஆலையை மூடுக : ஸ்டாலின்
கொள்கை முடிவு எடுத்து ஆலையை மூடுக : ஸ்டாலின்
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய தலைகுனிவு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஸ்டெர்லைட் ஆலையை மூட அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுக்குமாறு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், உயர்நீதிமன்ற நீதிபதிகளும் விடுத்த கோரிக்கையை முதலமைச்சர் எடப்படி பழனிசாமி உதாசீனப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். கொள்கை முடிவு எடுத்திருந்தால் பசுமைத் தீர்ப்பாயம் நிச்சயம் தலையிட்டிருக்காது என்றே தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று, தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடமும், உயிரிழந்த குடும்பங்களிடமும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.அந்த ஆலை தொடருவது "சீர் செய்யவே முடியாத மாசு ஏற்படுத்தும்" என்பதை உறுதி செய்யும் வகையில் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழக அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Next Story