தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி

சென்னையில்,தலைகவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே சமயத்தில் ஆயிரத்து 300 காவலர்கள் தலை கவசம் அணிந்து சாலையில் பயணித்தனர்.
தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி
x
சென்னையில், தலைகவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே சமயத்தில் ஆயிரத்து 300 காவலர்கள் தலை கவசம் அணிந்து சாலையில் பயணித்தனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், காவல்துறையினர் பங்குபெற்ற, தலைகவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  ஆயிரத்து 300 காவலர்கள் ஒரேநேரத்தில் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணித்தனர். ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி எழும்பூரில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக பயணித்து மீண்டும் ராஜரத்தினம் மைதானத்தில் முடிவடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்