யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் : தேக்கம்பட்டியில் இன்று தொடங்குகிறது
தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று தொடங்குகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நடைபெறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்க 26 யானைகள் அங்கு வந்துள்ளன. முகாம் துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வேலுமணி, சேவூர் ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். முகாமிற்கு வந்துள்ள யானைகள் நீண்ட தூரம் லாரியில் பயணம் செய்து வந்துள்ளநால் அவை களைப்புடன் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு முகாமிற்கு வந்த பல யானைகள் அடையாளம் கண்டு தும்பிக்கையால் தழுவி விளையாடி மகிழ்ந்தன.
Next Story