புதிய தலைமைச் செயலக வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவு ரத்து

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
x
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இதனிடையே, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் தற்போதைய தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் நேரில் ஆஜராக ரகுபதி ஆணையம் சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மூவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணையில், ரகுபதி ஆணையத்தின் விசாரணையை நிறுத்தி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சில நாட்களுக்கு பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம், ஆணையம் திரட்டிய தகவல்களை ஆராய்ந்து, அதில் முகாந்திரம் இருந்தால், விசாரணை நடத்தலாம் என பரிந்துரைத்தார். இதனிடையே, இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன் தொடர்ந்த வழக்குகள், நீதிபதி புஷ்பா முன்பு இன்று விசாரணைக்கு வந்தன அப்போது, விசாரணை ஆணையம், விசாரணையை முடித்து அறிக்கை அளிக்காத நிலையில், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்