கஜா புயல் நிவாரணம் - தமிழக அரசு மீது மத்திய அரசு புகார்...

கஜா புயல் பாதிப்பு குறித்த அறிக்கை தயாரிப்பதற்கு தேவையான விளக்கங்களை, தமிழக அரசு தரவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
x
கஜா புயல் பாதிப்புக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வும் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து சென்ற மத்தியக் குழு, எப்போது தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அறிக்கை தாக்கல் செய்ய சில விளக்கங்கள் தேவைப்படுவதாகவும் அவற்றை தராமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்தியக் குழுவிற்கு தேவையான விளக்கங்களை இன்றே தருவதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் உறுதியளித்தார். இதையடுத்து எப்போது அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பதை கேட்டு தெரிவிக்கும்படி மத்திய அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்