விடுதிகளுக்கு அரசு புதிய கட்டுப்பாடு விதிப்பு : கால அவகாசம் வழங்க உரிமையாளர்கள் கோரிக்கை

அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்காத நிலையில் ஜனவரி 1 முதல் விடுதிகளை மூடும் சூழல் ஏற்படும் என சென்னை விடுதி உரிமையாளர்கள் நலசங்க செயலாளர் மனோகரன் எச்சரித்துள்ளார்.
விடுதிகளுக்கு அரசு புதிய கட்டுப்பாடு விதிப்பு : கால அவகாசம் வழங்க உரிமையாளர்கள் கோரிக்கை
x
* சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்கள் விடுதி, குளியலறை,படுக்கை அறை உள்ளிட்டவற்றில்  கேமராக்கள் பொருத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விடுதி உரிமையாளர்களுக்கு  அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக சென்னை விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்  நேற்று நடைபெற்றது. 

* இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய,  அந்த சங்கத்தின் செயலளார் மனோகரன் வரும் 31 ஆம் தேதிக்குள் விடுதி கட்டிடத்தின் பட்டா, கட்டிட வரைப்படம்,மற்றும்  அறையின் அளவு குறித்து விவரங்களை சமர்ப்பித்து சான்றிதழ்களை பெறவேண்டும் என அரசு அறிவித்துள்ளதாகவும், இதை மேற்கொள்ள போதிய கால அவகாசத்தை அரசு வழங்கவில்லை என்று தெரிவித்தார். கால அவகாசம் அளிக்காத நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதிகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்