துப்பாக்கிச் சூடு வழக்குகள் சிபிஐ-யிடம் ஒப்படைப்பு...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகளை சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்ததை அடுத்து சிபிஐ விரைவில் விசாரணையை தொடங்கவுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22-ஆம் தேதி போராட்டத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இதில், தென்பாகம், வடபாகம், சிப்காட், புதுக்கோட்டை சரக காவல் நிலையங்களில் 249 வழக்குகள் பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தன. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சிபிசிஐடி போலீசார், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை ஆய்வு செய்து, குண்டுகளை கைப்பற்றினர். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு விசாரணையை சிபிஐக்கு மாற்றி ஆகஸ்ட் 14-ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான 207 வழக்குகளின் ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்தனர். ஆவணங்களை சரிபார்த்த பின்னர் விசாரணையை தொடங்க உள்ளது சிபிஐ.
Next Story