மேகதாது அணை விவகாரம் : கர்நாடகாவுக்கு தமிழகம் பதில் கடிதம்
மேகதாது அணை விவகாரம் குறித்த பேச்சுவார்த்தை தொடர்பாக கர்நாடகாவுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
மேகதாது அணை விவகாரம் குறித்த பேச்சுவார்த்தை தொடர்பாக கர்நாடகாவுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
* முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி கர்நாடக அமைச்சர் சிவகுமார் எழுதிய கடிதத்துக்கு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
* அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, மேகதாது அணை பணிகளை கைவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
* நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான செயல்பாடு தொடர்பாக, கர்நாடகா மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு போட்டுள்ளதை, கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
* நீதிமன்றத்தின் முன்பு அவமதிப்பு வழக்கு உள்ளதால், பேச்சுவார்த்தை என்பது தவறானது எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மேகதாது அணை தொடர்பாக விரிவான ஆய்வு அறிக்கை தயாரிப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடகம் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல், காவிரியின் எந்த பகுதியிலும் எந்த விதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் சி.வி.சண்முகம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story