விடுப்பு தர மறுத்ததால் காவலர் தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் காவலருக்கு, ஆய்வாளர் விடுப்பு தர மறுத்ததால், அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுப்பு தர மறுத்ததால் காவலர் தற்கொலை முயற்சி
x
நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் காவலருக்கு, ஆய்வாளர் விடுப்பு தர மறுத்ததால், அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிவகிரியை சேர்ந்த காவலர் வெங்கடேஷ்,  தனது சகோதரி மகளின் காது குத்தும் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக காவல் ஆய்வாளர் சாந்தியிடம், ஒரு மாதம் விடுப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆய்வாளர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அவரை மீட்ட சக காவலர்கள்  மருத்துவமனையில் சேர்த்தனர். 

Next Story

மேலும் செய்திகள்