"மனித நேயத்தோடு தீர்ப்பு வழங்கினால் எதிர்ப்பு வரும்" - நீதிபதி கிருபாகரன்

எதிர்ப்புகளை கண்டு சோர்ந்து விடாமல் மனித நேயத்தோடு தீர்ப்பு வழங்குவதாக உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.
x
சென்னையில் அனைத்திந்திய பொதுமக்கள் பாதுகாப்பு மையத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகம் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை பெற்றுக் கொண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேசினார். அப்போது, அவர், சட்டத்தை மீறுவது தமிழகத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளதாகவும் ஹெல்மெட் தீர்ப்பு அளித்தபோது, தான் 500 கோடி ரூபாய் வாங்கியதாக கூறினார்கள் எனவும் வேதனை தெரிவித்தார். எதிர்ப்புகளை கண்டு சோர்ந்து விடாமல் மனித நேயத்தோடு தீர்ப்புகளை வழங்குவதாகவும் நீதிபதி கிருபாகரன் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்