123 வயதிலும் உடற்திறனுடன் வாழும் கொல்கத்தா துறவி
123 வயதிலும் யோகாசனங்களை செய்து உடலளவிலும் மனதளவிலும் மகிழ்ச்சியுடன் வாழும் துறவி ஒருவர், இளைய சமுதாயம் நேர்மையுடன் வாழ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
123 வயதிலும் யோகாசனங்களை செய்து உடலளவிலும் மனதளவிலும் மகிழ்ச்சியுடன் வாழும் துறவி ஒருவர், இளைய சமுதாயம் நேர்மையுடன் வாழ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். சுற்றுச்சூழல் மாறுபாட்டால் மனிதர்களின் வாழ்நாள் வெகுவாக குறைந்து வரும் நிலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 123 வயது துறவி ஒருவர் தனது முதிர்வயதிலும் யோகாசனங்களை செய்து உடலளவிலும் மனதளவிலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். சுதந்திரத்துக்கு முன்னர் 1896 ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிறந்த சிவானந்தம், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஓம்கார நாத கோஸ்வாமி ஆசிரமத்தில் அவரது பெற்றோரால் 4 வயதில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு தீட்சை பெற்று குலக் கல்வி பயின்ற சிவானந்தம், துறவியாக தற்போது கொல்கத்தாவில் உள்ள சிவானந்த ஆசிரமத்தில் வாழ்ந்து வருகிறார். உப்பு, எண்ணெய், இனிப்பை தவிர்த்து, தினமும் அரைமணி நேரம் யோகாசனம் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என 123 வயதான சிவானந்தம் பாபா கூறுகின்றார்
Next Story