களைகட்டிய மாரியம்மன் கோயில் தேரோட்டம் : அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஈரோடு அருகே ஸ்ரீமகாமாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
x
நஞ்சைஊத்துக்குளி மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த 20ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும், மாரியம்மன் திருவீதியுலா, அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து, முக்கிய வீதி வழியாக இழுத்து சென்றனர். விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் ஒரு பகுதியாக,கேரளா செண்டை மேளம் முழங்க கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 

1 லட்சம் வெற்றிலையால் அம்மனுக்கு அலங்காரம் :

கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் உள்ள புகழ்பெற்ற மகா மாரியம்மன் கோவிலில், விவசாயம் செழிக்க வேண்டி ஒரு லட்சத்து எட்டாயிரம் வெற்றிலைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதை விதைக்கும் முன்பு, இந்த மாரியம்மனிடம் விதைகளை வைத்து வழிபட்டு பின்னரே விதை விதைப்பர். இதனால் விவசாயம் செழிக்கும், விளைச்சல் அதிகரிக்கும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நம்பிக்கையாகும். இந்நிலையில் கார்த்திகை அமாவாசையான நேற்று, செய்யப்பட்ப்பட்ட வெற்றிலை அலங்காரத்தை, ஏராளமான மக்கள் மற்றும் விவசாயிகள் தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்