6 மாதங்களில் இலவச வீட்டு மனை - தமிழக அரசு

புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 3 சென்ட் இலவச வீட்டு மனை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
x
புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 3 சென்ட் இலவச வீட்டு மனை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  அரசு புறம்போக்கு இடங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வசிக்கும் பொதுமக்களுக்கு அதே பகுதியில் மாற்று இடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று இடம் கிடைக்காத பட்சத்தில், அதே பகுதியில் தனியாரிடம் இருந்து இடத்தை விலைக்கு வாங்கி 3 சென்ட் இலவச வீட்டு மனை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இடப் பற்றாக்குறை இருப்பின், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பெறக்கூடிய குடும்ப தலைவரின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் இருக்க வேண்டும் என அரசாணையில் சொல்லப்பட்டுள்ளது. ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு இடங்களில் வசிக்கக்கூடிய மக்கள் குறித்த கணக்கெடுப்பை அதிகாரிகள் தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும் ஆறு மாதத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்